மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில், காவல்துறையினர் அதிரடி 1கிலோ 250 கிராம் கஞ்சா போதைப்பொருள் பிடிபட்டது.இரண்டு பேர் கைது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையால் 1கிலோ250கிராம் கஞ்சா போதைப்பொருள் பிடித்தனர்.தாராபுரம் சின்ன கடை வீதியை சார்ந்த முகமது அலி யின் மகன் ரஹூமான் வயது(35),தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சார்ந்த மணிகண்டன் மகன் ஜெயசந்திரன் வயது (24) இருவரும் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டு இருக்கும் போது காவல்துறையினர் கையும் கலவுமா பிடித்தனர். போதைப் பொருள் விற்ற குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
