மாவட்ட செய்திகள்
தில்லையாடி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா பூம்புகார் -மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி ஊராட்சியின் வரலாறு நூல் வெளியீட்டு விழா நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
தில்லையாடி கிராமத்தில் ஓய்வுபற்ற உடற்கல்வி இயக்குனர் ஜெகதீசன் எழுதிய தில்லையாடி வரலாறு என்ற நூலினை சிறப்பு அழைப்பாளராக சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். சிறப்பு பெற்ற தில்லையாடி வரலாறு நூலை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.அம்பேத்ராஜன், நா. கோகுலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்த நூலில் தில்லையாடி கிராமத்தை பற்றிய முழு வரலாற்று தொகுப்பு இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
