BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தங்கச்சி அம்மாபட்டி- ஊராட்சியை சுற்றி அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிபகுதி தங்கச்சி அம்மா பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஊர்களில் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் சார்பாக கூறப்படுகிறது. இதில் தங்கச்சி அம்மாபட்டி, தலைவாசல் கருப்பன் கவுண்டன்புதூர், கரிசல் காடு , குடும்பன் பட்டி, ஸ்ரீரங்க கவுண்டன்புதூர், கன்னிமார் கோவில் புதூர் போன்ற ஊர்களில் வாரத்திற்கு இரண்டு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப் படுவதாகவும் மேலும் பாறைதெருவில் உள்ள பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாகவும் இயற்கை உபாதை மேற்கொள்ள தங்களுக்கு கழிப்பிட வசதி இல்லை எனவும் கூறப்படுகிறது. இதில் நகரை மாரியம்மன் கோவில் ஒத்தை புளிய மரத்தில் இருந்து தலைவாசல் கருப்பன் கவுண்டன்புதூர் வரை செல்லும் சாலை மிகவும் சிதலமடைந்து உள்ளதாகவும் அதை சரி செய்து கொடுக்குமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னதாக கரிசல் காடு பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வேண்டும் எனவும் , வி.ஏ.ஓ அலுவலகம் ரேஷன் கடை, புதிய கட்டிடம் தலைவாசல் கருப்பன் கவுண்டன் புதூரில் பகுதி நேர ரேஷன் கடை ,பாறைத்தெரு ஸ்டாலின் நகரில் புதிய கலையரங்கம் ஏற்படுத்த வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )