BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் – மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர்ச்சியாக ஆணும், பெண்ணும் என இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தோட்டக்காரன் பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் தன்னுடைய கிராமத்தில் மூன்று மாதத்துக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் இது குறித்து பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை முறையிட்டும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் மக்கள் குறைதீர்க்கும் நாளான நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவரும், திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் அருகே உள்ள ராஜலட்சுமி நகர் 1வது தெருவில் வாசித்து வருபவர் சத்தியவாணி இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் குடியிருக்கும் இடத்தை கிரயம் பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அருகில் உள்ள மனை பிரிவை சேர்ந்தவர்கள் சத்திய வனிதாவின் இடத்தில் சேர்த்து வீடு கட்டியதாக தெரிகிறது .இது தொடர்பாக திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர் நிலத்தை அளந்து கொடுக்க பலமுறை மனு செய்துள்ளார். ஆனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை . இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. மேலும் இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )