BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் -ஏ.பி நகர் சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து -பெண்காவலர் பலி.

திண்டுக்கல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவருடைய மனைவி சுகந்தி( 27 )இவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன் ,மனைவி இருவரும் தங்கள் காரில் திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நிலையில் காரை சதீஷ்குமார் ஓட்டியுள்ளார். அப்போது திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலையில் ஏ.பி நகர் அருகே அவர்கள் காரில் வந்த பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரவேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுகந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். சசிக்குமார் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )