மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், சமூக ஆர்வலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் இன்றைய தினம் 15. 04.2022 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெட்ராத்தி ஊராட்சி மன்றமும் எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், சமூக ஆர்வலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது மெட்ராத்தி ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினருமான PS. தங்கராஜ் அவர்களின் தலைமையிலும், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளரும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கே. ஈஸ்வரசாமி அவர்களின் முன்னிலையிலும் நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் உயர்திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ( ரூ2500/- மதிப்புள்ள 11பொருட்கள் அடங்கிய ) தொகுப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சிவலிங்கம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் N. பாலசெந்தில், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மெட்ராத்தி த. கௌதம்ராஜ் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் தலைவர் நெல்சன், மெட்ராத்தி ஊராட்சி செயலர் தங்கவேல் மெட்ராத்தி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
