BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அருகே சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.

திருக்காட்டுப்பள்ளி அருகே சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சித்தாம்பிகை சமேத சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது. இன்று சித்தேஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து சிறப்பு ஹோமம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து பின் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் பக்தகோடிகள் முன்னிலையில் நடந்தது.

அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிறுதொண்டு நாயனார் இறைப்பணி மன்றத்தினர் மேற்கொண்டிருந்தனர். ஆலய அர்ச்சகர் சபரீஸ்வரன் திருக்கல்யாண ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தார். இதில் உள்ளூர், வெளியூர் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )