மாவட்ட செய்திகள்
1700 போலி மது பாட்டில்கள் பறிமுதல்.

மணிகண்டத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானங்கள் தயார் செய்த கும்பலை மதுவிலக்கு அமலாக்க தனிப்பிரிவு போலீசார் பிடித்ததோடு அவர்களிடமிருந்து 1700 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் செட்டி ஊரணி பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது வீட்டை காரைக்காலை சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவர் வாடகைக்கு எடுத்து பாண்டிச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்க மூலப்பொருள்களை வாங்கி வந்து மதுபானங்களை தயாரித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளார்.

இவருக்கு உதவியாக திருவாரூரை சேர்ந்த பாலமுருகன் (32) வெற்றிச்செல்வன் (22) விஜயகுமார் (23) சூர்யா (25) ஆகியோர் உடனிருந்து போலி மதுபானங்களை தயாரித்து போலி லேபிள்களை பாட்டில்களில் ஒட்டி திருச்சி சுற்றுவட்ட மாவட்டங்களுக்கு கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.
இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்க தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் நேற்று அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார், ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயிரத்து 700 கோட்டர் மதுபான பாட்டில்கள் இன்னோவா கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சுஜாதா திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருவெறும்பூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் 5 பேர் மீது வழக்குபதிந்து கைது செய்ததுடன் ஆயிரத்து 700 மது பாட்டில்களையும் , இன்னோவா காரையும் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
