மாவட்ட செய்திகள்
ஆத்தூர் -போடி காமன் வாடி கிராமம் அழகர் நாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ வீர நாகம்மாள் திருக்கோவிலின் 22 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர்நாயக்கன் பட்டி அழகர்சாமி நாயுடு தெருவில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ அருள்மிகு வீர நாகம்மாள் திருக்கோயில் 22- ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் காலை 7-00 மணிக்கு தெப்பத்திலிருந்து அம்மனுக்கு தீர்த்த நீர் ,பால் குடம் மேளதாளங்கள் முழங்க ஆடல் பாடலுடன் பூஜை புனஸ்காரங்களோடு ஸ்ரீ வீரநாகம்மன் அம்மனுடைய அலங்கார நகை பெட்டி எடுத்துவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு நகை அலங்காரம் செய்து தீபாராதனை அபிஷேகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் சித்ரா பௌர்ணமி குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.


அதனையடுத்து சுமார் 1:00 மணியிலிருந்து 2: 30 மணி வரை அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இறுதியாக அருள்மிகு ஸ்ரீ வீர நாகம்மாளுக்கு அபிஷேகம் , தீபாராதனை மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்வுடன் நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வீர நாகம்மாள் திருக்கோவில் பொறுப் பாளர்களான ஜெயராம் (நிர்வாக தலைவர்), மோகன் (ஆலோசகர்), ராம சண்முகம் (காரியதரிசி), சந்திரன் (துணை காரியதரிசி), கோவிந்தராஜ் (பொருளாளர்), கிருஷ்ணமூர்த்தி (செயலாளர்), அழகர்சாமி.சு (துணைத் தலைவர்), அழகர்சாமி.கோ (துணைச் செயலாளர்) மற்றும் ஸ்ரீ வீர நாகம்மாள் குல பங்காளிகள் செய்திருந்தனர். மேலும் உடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு ஸ்ரீ வீர நாகம்மாளின் அருள் ஆசி பெற்று சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
