மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் அதிமுக அமைப்புத் தேர்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தேர்தல் கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது.தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட 14ஒன்றியச் செயலர்கள், 6 பேரூராட்சி செயலர்கள், 1 நகரச் செயலர் மற்றும் பிற பதவிகளுக்கான அதிமுக அமைப்புத் தேர்தல் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள எல்.வி.ஆர்.கட்டடத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு முன்னிலையில் கட்சியின் வழிகாட்டு குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்த விண்ணப்ப கட்டணத்தை பெற்று விண்ணப்பங்களை வழங்கினர்.

தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் பெற்று பரிசீலனை செய்து தேர்தலை நடத்தினர். இதில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிராஜ், அம்மா பேரவை நகர பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஓட்டப்பிடாரம்

கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஒன்றியச் செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கருங்குளம் அய்யாத்துரை பாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமணன் பெருமாள், கருங்குளம் முன்னாள் ஒன்றிய சேர்மன் கோசல்ராம், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகையா பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி கருங்குளம் ஜான்சிராணி பாண்டியன், ஒன்றிய இணைச் செயலாளர் செங்கநல்லூர் முத்துலட்சுமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லட்சுமணன் பெருமாள்,எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் அருமைராஜ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் பாலமுருகன் என்ற விஜி,கடம்பூர் மாயா துறை,அழகர்சாமி, பழனிகுமார், முருகன், கார்த்திக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
