மாவட்ட செய்திகள்
110 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் : 2பேர் கைது!

வேலூர், குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 17-04-2022 அன்று காவல் ஆய்வாளர் சதீஷ் வழிகாட்டுதல்படி ,காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் ,தலைமை காவலர் சிவசுப்ரமணியன், முதல் நிலை காவலர் சதீஷ்குமார் மற்றும் காவலர் மோகன் ஆகியோர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் நடத்திய வாகனச்சோதனையில் TN04M-9945 என்ற ஈச்சர் வாகனத்தில் சுமார் 5500 கிலோ ரேஷன் அரிசியை (110மூட்டைகள்) காலியான தக்காளி கூடைகளுக்கு நடுவில் வைத்து ஆந்திர மாநிலத்திற்கு நூதனமுறையில் கடத்திச் செல்ல வந்தது தெரியவந்தது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான வேலூர் அப்துல்லாபுரம், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த
1) மணிகண்டன் (36) த/பெ குப்பன்,
2) கருணாகரன்(33) த/பெ ஏகாமபரம் என்ற இருவரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
