BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பார்க் கூலித் தொழிலாளி படுகொலை திமுக பிரமுகர் உள்பட 6 பேர் கைது.

பார்க் கூலித் தொழிலாளி படுகொலை திமுக பிரமுகர் உள்பட 6 பேர் கைது 48 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்ததால் போலீசாருக்கு பாராட்டு

நிலக்கோட்டை, கொடைரோடு அம்மையநாயக்கனூர் அருகே கழுத்து அறுக்கப்பட்டு பல்வேறு வெட்டுக்காயங்களுடன் முகம் சிதைத்து இளைஞரின் உடலை வீசிச்சென்ற திமுக-பார்அதிபர் உட்பட கொலையாளிகள் 6 பேரை கைது செய்தனர் காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்மையநாயக்கனூர் ரயில்வே பாலம் அருகே கடந்த .ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு பல்வேறு வெட்டுகாயங்களுடன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடலை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி சுகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து அப்பகுதியிலுள்ள CCTV பதிவுகள் மற்றும் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் இதனையடுத்து முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட இளைஞர் தேனி மாவட்டம் போடி சொக்கலிங்கநகரைச் சேர்ந்த கணேசன் மகன் முத்து எனவும் இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளதாகவும் தெரிய வந்தது.


முத்து பல்லடம் மகாலட்சுமி நகரில் அரசு மதுபான கடையில் பார் நடத்திவந்த கமுதியை சேர்ந்த திமுக முக்கிய பிரமுகரும் தொழிலதிபருமான முருகனிடம் கடந்த சில நாட்களுக்கு முன் மதுபான பாரில் வேலைக்கு சேர்ந்ததாகவும் அங்கே கடந்த சனிக்கிழமை பாரின் கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிவிட்டு தப்பியோடிய போது முத்துவை பல்லடம் பஸ் நிலையம் வரை விரட்டிச் சென்று பிடித்து வந்த திமுக- பிரமுகர் முருகன் மதுரை மண்பானை சமையல் ஓட்டல் அதிபரான முருகனின் நண்பர் கவின் இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு போதையிலில் முத்துவை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார் அப்போது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்த முத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இக்கொலையை மறைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய முருகன் முத்துவின் கழுத்தை அறுத்து முகம் தெரியாதளவிற்கு முகத்தை வெட்டி ரத்தத்தை தண்ணீர் ஊற்றி கழுவி உடலை தனது கருப்புநிற ஸ்விப்ட் காரின் பின் டிக்கியில் (TN.33 AB:0540) தனது சொந்த ஊரான கமுதி பகுதிகளில் சென்று வீச விடலாம் என எண்ணி தன் நண்பர்களுடன் பல்லடத்திலிருந்து கொடைரோடு வழியாக கமுதி சென்றுள்ளார்கள் அப்போது கொடைரோடு டோல்கேட்டை அடுத்து வரும்போது அதே காரில் பயணித்த முருகனின் நண்பர் மதுரை மாவட்டம் குருவித்துறை சேர்ந்த கோபால் நாம் கமுதி செல்வதற்குள் விடிந்துவிடும் இந்தப்பகுதி என் ஊருக்கு போகும் வழி தால் இப்பகுதியிலுள்ள தண்டவாளத்தில் வீசி விடலாம் எனக் கூறி அம்மையநாயக்கனூர் ரயில்வே பாலம் அருகே முத்துவின் உடலை தூக்கி சென்றுள்ளனர் ஆனால் இரயில்வே பாலம் மிக உயரமாக இருந்ததால் அருகே உள்ள புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர் இதனை அடுத்து பல்வேறு தொழினுட்ப விசாரணையில் இறங்கிய தனிப்படையினர் முத்துவை கொடூரமாக கொன்ற கொலையாளிகளான கமுதியைச் சேர்ந்த திமுக- பார் தொழிலதிபர் முருகன் (34), குருவித்துறையைச் சேர்ந்த கோபால் (34) மதுரை மண்பாணை சமையல் ஓட்டல் உரிமையாளர் சிவகங்கையைச் சேர்ந்த கவின் (19), சிவகங்கை மாங்குடி மருதுசெல்வம் (32),நத்தம் சிறுகுடி கார்த்திக் (31), மதுரை கொட்டாம்பட்டி டென்னிஸ் (29) உட்பட 6 குற்றவாளிகளையும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சென்று கைது செய்து அழைத்து வந்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….


பிளாக் மார்கெட் சாராய விற்பனையில் கொடிகட்டி பணம் சம்பாதித்த திமுக பிரமுகர் தன் பாரில் வேலை செய்த நபரை ரூ.4000 திருடியதாக கூறி போதையில் அவரை அடித்தே கொலை செய்து முகம் சிதையும் அளவிற்கு வெட்டி பல கிலோ மீட்டர் தூரம் கொண்டு வந்து உடலை வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் வெறும் நான்காயிரம் ரூபாய்க்குத்தான் இக்கொலை நடைபெற்றதா ? அல்லது வேறு எதும் பணம் கொடுக்கல் வாங்கல் அல்லது முன்பகை காரணமாக நடந்ததா ?கள்ளகாதல் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எந்த தடையமும் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுமார் 48 மணி நேரத்தில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்து சிறையில் அடைத்ததால் திண்டுக்கல் –தேனி சரக டிஐஜி முகேஷ் குமார்மீனா அனைத்து காவலர்களுக்கும் சிறப்பு சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )