BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சீத்தாபுரம் கிராமத்தில் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நூத்துலாபுரம் ஊராட்சியில் சீத்தா புரத்தில் உள்ள வீடுகள் தோறும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் சிறப்பு திட்டமான வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றிய 15வது நிதிக்குழு மானியக் திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடுகள் தோறும்  குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பூமி பூஜை விழா நூத்துலாபுரம்  ஒன்றிய கவுன்சிலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: சீத்தா புரம் என்ற கிராமத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு இலவசமாக வழங்கும் விழா முன்னிட்டு பூமி பூஜை நடந்த போது எடுத்த படம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )