BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பேப்பர் , அட்டை, பிளேட் , கெமிக்கல் மற்றும் இங்க் ஆகியவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாஸ்டர் பிரின்டர் அசோசியேசன் சார்பில் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

திருப்பூரில் பின்னலாடை தொழில் அதிக அளவில் இருந்து வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அட்டைகள் தயாரிப்பதற்கான பேப்பர் , பிளேட் , கெமிக்கல் மற்றும் இங்க் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும் இதன் காரணமாக பிரின்டிங் தொழில் நடத்தி வருபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவற்றின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அட்டை இறக்குமதி வரியை குறைக்கவும் , அட்டை ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்து உள்நாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர் அசோசியேசன் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )