BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு இடங்களில் குட்கா பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல்-தனிப்பிரிவு போலீசார் அதிரடி.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பெங்களூரில் இருந்து போலி கொரியர் வாகனம் மூலம் கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் டேம்போ பறிமுதல்-கடத்தி வந்த 5 பேர் கைது-மேலும் புத்தளம் பகுதியில் 325 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கிய இளைஞர் கைது-அவனிடமிருந்து குட்கா மற்றும் ரூ 41 ஆயிரம் பறிமுதல்-ஒரே நாளில் போதைபொருட்களை விற்பனை செய்த 6 பேரை கைது செய்த தனிப்பரிவு போலீசாரை எஸ்.பி.. பாராட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்,மேலும் கஞ்சா,குட்கா போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர், அதைத்தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் ஒரே நாளில் 1,525 கிலோ குட்கா புகையிலை பண்டல் பண்டலாக பறிமுதல் செய்துள்ளனர்,இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மாவட்ட எல்கை பகுதி காவல்கிணற்றிலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனை சாவடியில் ஆரல்வாய்மொழி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கொரியர் வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் மூடை மூடையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இவற்றை கடத்தி வந்ததாக ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் குமார்,லெட்சுமணன்,ஜெஸ்வர்சிங், மற்றும் சேலத்தைச் சேர்ந்த விஜயகுமார்,அழகு பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப போலி கொரியர் வாகனம் தயார் செய்து அதில் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குட்கா பொருட்களை கைப்பற்றி 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்,மேலும் அதே போல் புத்தளம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அருப்புக்கோட்டையை சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் அந்த பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவிந்நது,பின்னர் அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 325 கிலோ குட்கா மூட்டைகள் மற்றும் ரூ.41 ஆயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்,ஒரே நாளில் குட்கா விற்பனை செய்த 6பேரை தனிப்படை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் தனிப்பிரிவு போலீசாரை அழைத்து பாராட்டினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )