மாவட்ட செய்திகள்
பழனி கல்லூரியில் இயற்கை உணவுகள் கண்காட்சி.

பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் இயற்கை மற்றும் ஆரோக்கிய உணவுகள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ப. பிரபாகர் அவர்கள் துவக்கி வைத்தார்.
பேராசிரியர் முனைவர் க. கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனைவர் இரா. ரவிச்சந்திரன் ஆகியோர்
முன்னிலை வகித்தார்.
இக்கண்காட்சியில் நமது பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை மற்றும் ஆரோக்கிய உணவுகள் காட்சிப்படுத்தப்படிருந்தன. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அடுப்பில்லா உணவு சமையல் போட்டி நடைத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு முதல்வர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
பேராசிரியர்கள, மாணவ, மாணவியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கண்காட்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இயற்கை உணவுகளை ஊக்கப் படுத்தும் வகையில் மோர் வழங்கப் பட்டது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் இயற்கை மற்றும் ஆரோக்கிய மன்றப் பொறுப்பாளர்கள் முனைவர் இரா. இரத்தினசாமி, திருமதி பரமேஸ்வரி, முனைவர் கலைமதி, முனைவர் கண்ணதாசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
