மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் பாஜக இளைஞரணி சார்பில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் தந்த தலைவர்கள் நூல் வெளியீடு நடைபெற்றது.

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் தந்த தலைவர்கள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் நூலினை பெற்றுக் கொண்டார் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் கூறும்போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பல தலைவர்களை நினைவு கூறும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது,

தமிழகத்தின் பங்கு என்பது சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்காக இருந்து இருந்துள்ளது தமிழகத்தை சேர்ந்த பல நபர்கள் இளம் வயதிலேயே தங்களது உயிரை நீத்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் செய்து பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


இப்புத்தகத்தில் வாஞ்சிநாதன் ஐயர், திருப்பூர் குமரன், வீரன் சுந்தரலிங்கம், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா, அழகு முத்துகோன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், முத்துராமலிங்க தேவர், தேனி என் ஆர் தியாகராஜன், ருக்குமணி லட்சுமிபதி, வ உ சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர், நீலகண்ட பிரம்மச்சாரி, காமராஜர், ராஜகோபாலாச்சாரியார் ஆகியோரின் வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
