மாவட்ட செய்திகள்
தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ 1.50 கோடியில் புதிதாக மின் தகன மேடை அடிக்கல் நடும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் சந்தைவெளித்தெரு சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் ரூ.1 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மின்தகன மேடை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அடிக்கல் வைத்து கட்டிட பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எம்.அப்துல் மாலிக், பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூர் திமுக துணை செயலாளர் மதியழகன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
