BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டுவில், பணம் வராததால் ஆத்திரம் அடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவில், மாரியம்மன் கோவில் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் சுதன்(22) என்பவர் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயன்றார். ஆனால் பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்க முடிவு செய்தார்.
அதன்படி வீட்டுக்கு சென்ற அவர், சிறிதுநேரம் கழித்து அரிவாளுடன் மீண்டும் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதனை கைது செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )