BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ரயில்வே நிலையத்தில் ரயில் டிக்கெட் பதிவுக்கான கவுன்டர்கள் 1 மட்டுமே உள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ரயில் சம்பந்தப்பட்ட தகவலை கேட்கவும் ,முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறவும் மற்றும் முன்பதிவு டிக்கெட் பெறவும் மிக சிரமமாக உள்ளது.

உடுமலையில் ரயில்வே கவுண்டர் ஒன்று மட்டுமே உள்ளதால் தட்கல் டிக்கெட் போடுங்க நேரத்தில் ரயில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதற்கும் பொதுமக்கள் ரயில் பிளாட் பார்ம் பற்றிய சம்பந்தப்பட்ட தகவலை கேட்கவும் மிகவும் சிரமமாக உள்ளது.

தற்போது சில மாதங்களாக கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் ரயில்வே டிக்கெட் பணியில் இருப்பவர்கள் பொது மக்களுக்கு உதவுவதில் மிகச் சிரமமாக உள்ளது. ஆகவே, ரயில்வே துறை அதிகாரிகள் உடுமலையில் கூடுதலாக ஒரு கவுண்டர் அமைக்க வேண்டும் எனவும், முன்பதிவில்லா டிக்கெட் பெறவும் ரயில் சம்பந்தப்பட்ட தகவலை பெறவும் ஒரு கவுண்டர் அமைத்தால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.மக்களகன் நலன் கருதி அரசு இதை உடனடியாக பரிசீலனை செய்து கவுண்டர் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் ரயில்வே கோட்ட மேலாளர் இருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது உடுமலை ரயில்வே நிலையத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதால் பெதப்பம்பட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,மைவாடி,புஷ்பத்தூர், கோமங்கலம் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் உடுமலை ரயில்வே நிலையத்தை நாடி வர தொடங்கியுள்ளார்கள். உடுமலை ரயில்வே நிலையத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூடுதல் கவுன்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும். எனவே கூறுங்கள் கவுண்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )