மாவட்ட செய்திகள்
தஞ்சை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.



டெல்டா மாவட்டங்களில் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது நிலையில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் திருத்துறைப்பூண்டி பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் திண்டுக்கல்லைச் சேர்ந்த மகேஸ்வரன் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து நாகை திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
