மாவட்ட செய்திகள்
ஸ்ரீரங்கம் கோயிலில்1000 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அரங்கனை தரிசித்து செல்கின்றனர்.

இவர்களது குடிநீர் தேவையை சந்திக்கும் வகையில் இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்
ஸ்ரீ தாயார் சன்னதியில் பரோடா வங்கி சார்பில் அமைக்கப்பட்ட 1000 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் பரோடா வங்கியின் பொது மேலாளர் ரெங்கராஜன் திறந்து வைத்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தர்பட்டர், புலவர்.கிருஷ்ணா பரோடா வங்கியின் மண்டல தலைமை அதிகாரி ஜெய்கிஷன், துணை தலைமை அதிகாரி செல்வகுமார் , திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பரோடா வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
