BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மடத்துக்குளம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26 வருடங்களுக்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994.1996 வரை படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த விழாவை மாரிமுத்து ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் மாணவ மாணவியர்கள் ஆசியர்கள் கலந்து கொண்டனர் .

 

இந்த நிகழ்வில் 26 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் மாணவ மாணவிகள் தங்கள் அன்பை தங்கள் குடும்பத்துடன் பரிமாறிக் கொண்டனர் மற்றும் தங்கள் ஆசிரியர்களை தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர் பின்னர் முன்னாள் மாணவ மாணவியர்கள் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த விழாவில் இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் எளையமுத்தூர் ஊராட்சி தலைவர் மாரிமுத்து தான் படித்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர ஒரு லட்சம் ரூபாய் தருவதாக விழா மேடையில் திடீர் அறிவிப்பை அறிவித்தார் இது அனைத்து மாணவர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.

 

 

இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )