BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது.

 

 

தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டி தலைமை தாங்கினார்.

தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், அல்லிநகரம் நகர அதிமுக செயலாளர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு மே தினம் கொண்டாடுவதின் சிறப்பு குறித்தும் மற்றும் அதிமுக-வின் சாதனைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

 

 

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையதுகான் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

முடிவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் சுந்தரராஜ் நன்றி கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )