மாவட்ட செய்திகள்
திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் தங்களுக்கு இடம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை பெண் மனு.

இலங்கை நாட்டைச் சார்ந்தவர் ஜெயராணி. இவரும், இவரது தாயாரும் இலங்கைப் போரின் போது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர்.

தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை தேடி இலங்கைக்குச் சென்ற போது, அவரது கணவர் ஜெயராணியை கைவிடவே, பிள்ளைகளும் அடைக்கலம் தர மறுத்து விட்டதாக தெரிவிக்கும் ஜெயராணி, கையிலிருந்த பணம்,நகை உள்ளிட்டவற்றைக் கொண்டு இலங்கையிலிருந்து மீண்டும் இந்தியாவிற்கு கடந்த ஜனவரி மாதம் திரும்பியதாகவும், அன்றிலிருந்து இன்றுவரை அகதிகள் முகாமில் தங்களுக்கு இடம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறைக்கு மேல் கோரிக்கை மனுவை உயர் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விசா காலம் கடந்த 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 82 வயதான தன்னுடைய தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் வாழ வழிசெய்யும் வகையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்குவதற்கு இடம் தர வேண்டும் என வலியுறுத்தி கண்ணீருடன் ஜெயராணி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
