BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் மண்டகப்படி தாரர்கள் பொதுமக்கள் பெரியோர்கள் புடை சூழ மங்கலப் பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக வந்த கொடிமரத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் நடை பெற்ற பின்பு கொடியேற்ற நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

11 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் 9 நாள் திருவிழாவாக அம்மனுக்கு பொங்கலிட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் திரு பல்லாக்கில் திருக்கோயிலை சுற்றி வரும் நிகழ்வும்,10 திருவிழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,

11 நாள் திருவிழாவில் பெண்கள் 1008 திருவிளக்கு ஏற்றி பூஜை நடைபெறும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )