மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஏ.டி.எம் திறப்பு விழா.அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அருகே மத்திய கூட்டுறவு வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு விழா நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் விளாத்திகுளம் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, ஏ.டி.எம்.மையம் திறந்து வைத்தனர்.இதன் மூலம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள், ஏ.டி.எம்.அட்டை மற்றும் ருபே விவசாய கடன் அட்டை வாயிலாக இந்தியாவிலுள்ள அனைத்து ஏ.டி.எம்.இயந்திரங்களிலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
திறப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் சிவகாமி,வங்கி பொது மேலாளர் சுந்தரேஸ்வரன்,உட்பட வங்கி ஊழியர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
