BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி கோவில்நிலங்கள், நீர்நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ஆர்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி நீர்நிலைகள் மற்றும் கோவில்நிலங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியில் தமிழக அரசும், வருவாய்துறையும் ஈடுபட்டு வருகிறது.

பலஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வரும் இடங்கள், ஒருகாலத்தில் நீர்நிலைகளாக இருந்து தற்போது நகர வளர்ச்சியின் காரணமாக மாறிப்போன நிலையில் அதனை அரசாணை 318பிரிவின்படி வகைமாற்றி பட்டா வழங்கவேண்டும், மேலும், திருச்சி மாவட்டத்தில் வக்புவாரிய இடம், தேவாலய இடம் மற்றும் கோவில்நிலம், புறம்போக்கு இடங்களில் பல ஆண்டகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஏழை, எளிய மக்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )