தலைப்பு செய்திகள்
அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது வழக்குபதிவு.

அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 4ந்தேதி தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு மதுரை ஆதினம் , மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் நேரில் சென்று மெளன அஞ்சலி செலுத்தினர் .அப்போது செய்தியாளர்களிடம் சந்தித்த மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் பேசி கையில் பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையீடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .பின்னர் செய்தியாளர்களிடம் திராவிட கழகத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் பேட்டி அளிக்கையில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் பேசி பேச்ச தமிழ்நாட்டில் வன்முறை தூண்டும் வகையிலும் , மதக்கலரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் அமைச்சர்களை சட்டமன்ற உறுபினர்களை நடமாட விட மாட்டேன் சொல்லவதும் வன்மையாக கண்டிக்க கூடியது. நடைமுறை சட்டத்தில் குற்றமாகும் எனவே தான் மன்னர்குடி ஜீயர் மீது தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார் .மேலும் அந்த புகாரில் வன்மையை தூண்டியது , மதக்கலவரத்தை தூண்டுவது, அரசை முடக்குவது சட்டபடி குற்றம் அவர் மீது பல்வேறு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என புகார் அளித்ததாக தெரிவித்தார். இது போன்ற தமிழக முழவதும் மன்னர்குடி ஜீயர் மது புகார் கொடுத்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
