BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் விநாயகபுரம் தெற்கு காடு சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா.

ஆத்தூர் அருகே விநாயகபுரம் தெற்கு காடு சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி சக்தி அழைத்தல் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் தீச்சட்டி எடுத்தல் பூங்கரகம் மற்றும் விமான அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சி முடிவுற்று இறுதி நாளான இன்று அம்மனுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனை துதி பாடி கும்மி அடித்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )