BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் ஆண்டு பெருவிழா.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா 14ம் தேதி நடைபெறுகிறது.


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேண்ட் வாத்யங்கள் இசைக்க ஊர்வலமாக ஆலயம் முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட கொடிமரம் முன்பு கொண்டு வரப்பட்டது. பின்னர் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் – அந்தோணிசாமி கொடிக்கு புனிதம் செய்து ஏற்றி வைத்தார். இதில் தமிழகம், கேரளா மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )