BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் மதுபான பாரில் வைத்திருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்.

மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கொடைக்கானல் மதுபானக் கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் பயன்படுத்தப்படுகிறது என்று கூறிய நிலையில் உடனடி நடவடிக்கையாக கொடைக்கானல் மதுபான பாரில் வைத்திருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொடைக்கானல் மதுபான பார்களில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட தண்ணீர் கேன்கள் பயன்படுத்தப்படுகிறது என்று நேற்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டசெய்தியாளர்கள் கூறிய நிலையில் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 200-க்கும் மேற்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் இருப்பது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாரின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர் பொதுமக்கள் கூறும் பொழுது கொடைக்கானலில் உள்ள அனைத்து மதுபான பார்கள் மற்றும் விடுதிகளில் கண்டிப்பாக ஆய்வு செய்யவேண்டும் கொடைக்கானலுக்கு வரும் சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களை சோதனை செய்தாலே தடைசெய்யப்பட்ட தண்ணீர் கேன்கள் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு என பொதுமக்கள தெரிவிக்கின்றன.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )