மாவட்ட செய்திகள்
பள்ளப்பட்டியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி 3 பேர் மீது வழக்கு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பசுபதிராஜன் மனைவி சங்கரம்மாள் வயது 25. இருவருக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது சங்கரம்மாளுக்கு 15 பவுன் நகையும் ,ஒரு லட்சம் சீர்வரிசை பொருட்களும் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக 40 பவுன் நகையும், ஒரு லட்சம் ரொக்கப் பணமும் கேட்டு பசுபதி ராஜன், அவரது தாயார் லதா, தந்தை மலைச்சாமி ஆகிய 3 பேர்களும் சேர்ந்து சங்கரம்மாவிடம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தும், கொடுமைப்படுத்தியதாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதாவிடம் கொடுத்த புகாரின்படி பசுபதி ராஜன், மலைச்சாமி, லதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
