மாவட்ட செய்திகள்
தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான மிருதங்க வாத்தியத்தில் சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றாக மிருதங்க வாத்தியம் உள்ளது, இதனையடுத்து திருவாளபுத்தூர் சதீஷ்குமார் மற்றும் அவரது மாணவர்கள் 31 பேர் இணைந்து தமிழ் இலக்கிய இலக்கண பாடல்களுக்கு மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக மிருதங்கம் வாசித்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை நிகழ்ச்சியை நடத்தினர் இதில் மாணவர்கள் கி-மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி 21ஆம் நூற்றாண்டு வரை உள்ள பாடல்களின் சத்தங்களை வாசித்து சாதனை நிகழ்ச்சியை செய்தனர், இந்த சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூர் ராஜராஜ சமய சங்க அரங்கில் நடைபெற்றது, இந்த நோபல் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்நிகழ்ச்சிக்கு நோபல் புக் ஆப் சாதனை புத்தகத்தின் நடுவர் சினேகா ராஜசேகரன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் இசை ரசிகர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
