BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருவர் புதிதாக நியமனம்! இன்று பதவியேற்பு!

உச்சநீதிமன்றம் 1950ம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்று முதல் மொத்தம் 48 தலைமை நீதிபதிகள் பதவி வகித்து வந்துள்ளனர். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி என்.வி.ரமணா பதவி ஏற்றார்.

இந்நிலையில் இன்று இரண்டு புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பதவி ஏற்க உள்ளார்கள். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுதான்சு தூலியா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியான ஜே.பி.பர்திவாலா ஆகிய இரண்டு நீதிபதிகள் டெல்லி உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்க உள்ளார்கள்.


புதிதாக பதவியேற்கும் நீதிபதிகளான சுதான்சு தூலியா, ஜே.பி.பர்திவாலா ஆகியோருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.


உச்சநீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. புதிய நீதிபதிகளாக சுதான்சு தூலியா, ஜே.பி.பர்திவாலா பதவி ஏற்பதன் மூலம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி நீதிபதி ஆர்.சுரேஷ் ரெட்டி ஓய்வு பெற்ற போது மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இன்று புதிதாக சுதான்சு தூலியா, ஜே.பி.பர்திவாலா நீதிபதிகள பதவியேற்பதன் மூலம் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )