தலைப்பு செய்திகள்
மீண்டும் வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்! பயணத் திட்டம் விபரம்!!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டார். இதன்படி லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசி லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும்,பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.இதனால்,பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது குறித்து ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில் “தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாகத் துபாய்,அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன்.இந்த பயணத்தின் மூலம்,6 மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுமார் 14,00 பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் , தனிப்பட்ட காரணங்களுக்காகவும் குடும்ப சுற்றுலாவாகவும் துபாய் சென்றார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில் தங்கம் தென்னரசு விமானம் இல்லாத காரணத்தினால்தான தனி விமானத்தில் முதல்வர் பயணம் மேற்கொண்டார் எனவும்,அதற்கான செலவை திமுகவே ஏற்றுக்கொண்டது.எனவே,தனி விமானத்தின் செலவு தமிழக அரசு உடையது அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் லண்டன்,அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பதவி ஏற்றபின் 2வது முறையாக அவர் வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்,முதல்வர் அவர்கள் ஜூன் இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் சென்று வர உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
