தலைப்பு செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை! மேலும் எகிற போகுது.

பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச சந்தை மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. வரலாறு காணாத வகையில் அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, மேலும் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.95க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. மக்களிடையே சற்று ஆறுதலை தந்தது.

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ரூ.77.41 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கான செலவு அதிகரிக்கும் என்பதால், அதன் விலையும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக உயர்த்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இனி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்பு அதிகமிருக்கிறது.

விலை உயரும் அபாயத்தை நினைத்து வாகன ஓட்டிகள் மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110ஐ கடந்து விட்டது. இந்நிலையில் மேலும் விலை உயரும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை வண்டிக்கு பெட்ரோல் போடவே செலவழிக்க வேண்டி இருக்கிறது என்று வேதனையாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
