BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி விவசாயியை தாக்கிய உதவி ஆணையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மாவட்ட ஆட்சியர் சிவராசிடம் மனு அளித்தார்.

திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காதை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை தீர்க்காததை கண்டித்தும், உர விலை உயர்வைதைப்போல் DPC-ல் நெல் விலை உயர்த்த கோரியும்,


மணப்பாறை பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததை கண்டித்தும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

போராட்டத்தின் போது காவல்துறையினர் விவசாயிகளை தாக்கி, வழுகட்டாயமாகவும் குண்டுகட்டாகவும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் துடையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயியை தாக்கிய கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய்தங்கம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர். சிவராசிடம் புகார் மனுவை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழங்கினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )