BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பெரிய வாளவாடியில் திமுகவினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி உட்பட்ட பகுதியில் பெரிய வாளவாடி சின்ன வாளவாடி பழையூர் கிராமங்கள் உள்ளது. 9 வார்டுகளில் விவசாயத்தையும் பிரதான தொழிலாகக் கொண்ட இந்த ஊராட்சியில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடந்தது பொது மக்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கிராம கணக்குகளில் முறைகேடு செய்ததாக கூறி சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு திமுகவினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஊராட்சி குழு உறுப்பினர் கமலம் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் அதைத் தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது கணக்கு வழக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தணிக்கை செய்தால் உண்மைத்தன்மை தெரியவரும் என்று பொதுமக்களும் ஊராட்சி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )