மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி எனும் கிராமத்தில் விவசாயவிளை நிலங்களை கூறு(பிளாட் )போட்டு விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி எனும் கிராமத்தில் விவசாயவிளை நிலங்களை கூறு(பிளாட் )போட்டு விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், புத்திரன்திடல் இவ்வூர்களுக்கு செல்லும் வழியில் M.V கார்டன் எனும் நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ய தொடங்கி உள்ள நிலையில் விவசாய குடும்பங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளனர் 10 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்து பிளாட் போடும் பணியில் இறங்கியுள்ளனர் இதனால் 500 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


காவேரியின் கடைக்கோடியானா மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் இருபோக சாகுபடி நடைபெறும் ஊராக சீதைசிந்தாமணி, சரபோஜி ராஜபுரம், புத்திரன்திடல் போன்ற கிராமங்களில் நெல், பருத்தி, பயறுவகைகள் சாகுபடி அதிக அளவில் செய்து வருகின்றனர் தற்போது பாண்டிச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து விலைநிலங்களை ரியல்எஸ்டேட் என்ற பெயரில் பிளாட் போட்டு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர் என்றும் விலை நிலங்களை பிளாட் போட்டு விற்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அப்புற படுத்துமாறு விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
