BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பசும்பால் திட்டம்! மத்திய நிதியமைச்சர் துவங்கி வைத்தார்!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக பசும் பால் வழங்கும் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் நடத்தும் என்.ஜி.ஓ. அமைப்பான மக்கள் சேவை மையம், ரோட்டரியுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றார்.

விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும் போது, ‘‘பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை தெற்கு தொகுதியில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மக்களுடன் நெருங்கி பழகி அவர்களது பிரச்சினைகளை கண்டறிந்து உதவி செய்யும் வகையில் எங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அதே போல் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., போன்று மக்களுக்கு சேவையாற்றும் எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க வேண்டும். பா.ஜ.க. அரசு ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு அடுத்த தேர்தலில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றவர்கள், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான அடையாள அட்டை தகுதியானவர்களுக்கு வழங்கப்படும். அந்த அடையாள அட்டையை காண்பித்து வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளில் அமுதம் பசும்பாலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தினசரி கால் லிட்டர் பசும்பால் வழங்கப்படுகிறது.


வெண்டிங் இயந்திரம் மூலமாக பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலதா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )