BREAKING NEWS

தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடக்கம்!!

தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடக்கம்!!

டிஎன்பிஎஸ்சி

இன்று காலை தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நடைப்பெறுகிறது. இந்நிலையில் குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், தேர்வு நடைமுறை என்ன? எதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

தேர்வு எழுதுபவர்கள் தேர்வு கூடத்திற்கு காலை 08.30 மணிக்கு வந்து சேர வேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வானது காலை 09:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.  தேர்வு எழுத உங்களுக்கு வழங்கப்படும் ஓஎம்ஆர் ஷீட் உங்களுடையது தானா என்பதை தெளிவாக பார்த்த பின்னரே நீங்கள் பதிலளிக்க தொடங்க வேண்டும், தவறான ஷீட்டில் பதிலளித்து விட்டால் உங்களது விடைத்தாள் பேப்பர் நிராகரிக்கப்படும்.

தேர்வர்கள் தேர்வெழுதும் இடத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  தேவைப்படுபவர்கள் சாதாரண வாட்ச்களை வேண்டுமானால் அணிந்து கொண்டு செல்லலாம், இருப்பினும் தேர்வறையில் நேர கணக்கை அறை கண்காணிப்பாளர் தெரிவிப்பார்.

தேர்வர்கள் தேர்வெழுத கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென டிஎன்பிஎஸ்சி ஆணையம் கூறியுள்ளது, ஆய்வாளர்கள் சரிபார்க்கும் பொழுது மட்டும் முக கவசத்தை அவிழ்க்கலாம் என்றும் மற்ற நேரம் முகக்கவசத்தை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளது.

TNPSC 1

தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும், இதன் மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும்.  தமிழ் அல்லது ஆங்கில பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவு பகுதியிலிருந்து 75 வினாக்களும், கணித பகுதியிலிருந்து 25 வினாக்களும் கேட்கப்படும்.

குரூப் 2 தேர்வின் முதல் நிலை தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, இரண்டாம் கட்ட தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும், இதன் முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடக்கிறது. 5,529 காலி பணியிடத்துக்கு நடைபெறும் தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இன்று நடைபெறும் தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )