ஜப்பான் சென்றார் மோடி! உற்சாக வரவேற்பு! அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை!
ஜப்பான் சென்றார் மோடி! உற்சாக வரவேற்பு! அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை!
இன்று, தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஜப்பான் நாட்டிற்கு சென்றார் இந்திய பிரதமர் மோடி. பிரதமர் மோடியை ஜப்பான் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஜப்பான் வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பானில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஜப்பான் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, நாளை வரை ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நாளை ( மே 24ம் தேதி) டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளகிறார்.
இந்தியா உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள குவாட் உச்சி மாநாட்டில் இந்தோ-பசிபிக்கில் உள்ள சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் குவாட் உச்சி மாநாட்டுக்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்துவார் என்று கூறப்படுகிறது. இச்சந்திப்புகளின் மூலம் இந்தியாவுடனான நட்புறவு பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஜப்பானிய வர்த்தக சமூகம் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார்.
குவாட் உச்சி மாநாடு என்பது ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய பாதுகாப்பு, ஜனநாயகம், சர்வதேச சட்டம், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உரையாடலைக் குறிக்கிறது.பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து, அறிக்கையொன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா, ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதை தான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க இந்த பயணம் நல்ல வாய்ப்பாக அமையும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.