BREAKING NEWS

மோடியை ஊர்வலமாக கூட்டி வந்த பிளான் படு தோல்வி.. பதற்றத்தில் அண்ணாமலை.. அலறவிட்ட ஜோதிமணி.

மோடியை ஊர்வலமாக கூட்டி வந்த பிளான் படு தோல்வி.. பதற்றத்தில் அண்ணாமலை.. அலறவிட்ட ஜோதிமணி.

பிரதமர் மோடியை ஊர்வலமாக அழைத்து வந்து தமிழ்நாட்டில் காலூன்றலாம் என பாஜகவினர் கனவு கண்டனர் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் #Goback Modi என்று சொல்லிவிட்டனர் அந்தப் பதட்டத்தில் உண்ணாமலை புலம்புகிறார் என ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

 

பிரதமர் மோடியை ஊர்வலமாக அழைத்து வந்து தமிழ்நாட்டில் காலூன்றலாம் என பாஜகவினர் கனவு கண்டனர் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் #Goback Modi என்று சொல்லிவிட்டனர் அந்தப் பதட்டத்தில் உண்ணாமலை புலம்புகிறார் என ஜோதிமணி விமர்சித்துள்ளார். பிரதமர் இருந்த மேடையில் முதலமைச்சர் பேசிய பேச்சை எண்ணி வெட்கப்படுகிறேன் என அண்ணாமலை கூறியுள்ள நிலையில் அதற்கு பதிலடியாக ஜோதிமணி இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக திமுக இடையேயான கடுமையான கருத்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் மிக அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் மோடி முன்னிலையில் பேசிய பேச்சை அண்ணாமலை மிக மோசமாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகம், மற்றும் தமிழக அரசியல் களம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜோதிமணி முன்பு வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு, 2024 தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும். இதை எந்த அடிப்படையில் கூறுகிறேன் என்றால் இலங்கையில் ராஜபக்சேவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அளவிற்கு வேறு யாரையும் அந்த மக்கள் கொண்டாட வில்லை, ஆனால் இன்றைக்கு சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது, ராஜபக்சவைவே அந்த மக்கள் துரத்தி அடிக்கின்றனர். அப்படி 2024 தேர்தலில் நிச்சயம் மோடியை மக்கள் வீழ்த்துவார்கள் ராகுல் பிரதமர் ஆவார். பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முதல்வரின் ஸ்டாலினை பேச்சை கேட்டு வெட்கப்படுகிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறரே என்ற கேள்விக்கு, ஒரு அரசாங்க நிகழ்ச்சியில் திமுகவுக்காக அவர் பேசியிருந்தால் அண்ணாமலை அவமானப்படலாம், ஆனால் மக்களுக்காக தன் முதல்வர் பேசினார், அதற்கு ஏன் அண்ணாமலை வெட்க்கப்படுகிறார்? மோடியைப் போலவே மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளக்கூடாது என அண்ணாமலை முடிவு செய்துவிட்டார் போல.


மோடியை ஊர்வலமாக அழைத்து வந்து எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தமிழக மக்கள் #Goback Modi என்று கூறிவிட்டனர். அந்தப் பதற்றத்தில் அண்ணாமலை புலம்புகிறார். மோடி கலந்து கொண்ட விழாவில் முதலமைச்சர் பேசியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்விக்கு, பாஜக செய்வதெல்லாம் விளம்பரத்திற்கான யுக்திதான், அதனால் தான் அவர்கள் யார் பேசினாலும் அதை விளம்பரமாக பார்க்கிறார்கள், நிதி ஒதுக்குவது முதல் மாநில உரிமைகள் வரை அனைத்திலும் ஒன்றி அரசாங்கத்தால் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அவற்றையெல்லாம் முறையாக எங்களுக்கு கொடுக்க வேண்டுமென பிரதமரிடம் கேட்பதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )