13-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாள்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 21 வது ஆண்டு பொதுக்குழு மாநில மாநாடு தஞ்சையில் டிசிசிஎ நிறுவன தலைவர் சகிலன் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளது.
மாணவ மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் முதல் 5 நாள்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் இதில் என்ஜிஓ க்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை அறிவுரையாக விளங்குவர்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எமுதாத மாணவர்களுக்கு வருகிற ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் மாணவர்கள் பயப்படாமல் அந்த தேர்வை எழுத முன்வர வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
CATEGORIES Uncategorized