BREAKING NEWS

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான கடந்த மே மாதம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், இறுதித்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளமால ஒன்று முதல் ஒன்பது வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த கல்வியாண்டில் நடைபெற்ற அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் எழுதினாலே போதுமானதும் என்றும் இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து தனித்தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்போது 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )