BREAKING NEWS

இலங்கையில் வாட்டும் வறுமை தமிழகத்தை நோக்கி வரும் இலங்கைத் தமிழர்கள் 90 ஆக உயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை.

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மேலும் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் வாட்டும் வறுமை... தமிழகத்தை நோக்கி வரும் இலங்கைத் தமிழர்கள்: 90 ஆக உயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், அங்கு வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் பலர் அண்டை நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். அரிச்சல்முனை கடல் பகுதிக்கு ஃபைபர் படகு மூலம் வந்திறங்கிய அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு, விசாரணை நடத்தினர். உரிய விசாரணைக்கு பிறகு 7 பேரும் அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே இலங்கையில் இருந்து 23 குடும்பங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில் இவர்களோடு மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )