திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் மண்வளம காப்போம் பேரணி கருத்தரங்கம் நடைபெற்றது .

ஈஷா யோகா மையத்தின் சார்பில் உடுமலைபேட்டை சுற்றுவட்டாரப்பகுதி மடத்துக்குளம். ஜல்லிபட்டி, எரிசனம்பட்டி, குமரலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மண்வளம் காப்போம் பேரணி கருத்தரங்க நிகழ்ச்சி சுமார் 500 க்கும் மேற்பட்டோர் நகராட்சி திருமண மண்டபத்தில் கலந்துகொண்டு மண்வளம் காப்போம் பற்றி உறுதிமொழி ஏற்றுகொண்டனர் முன்னதாக வாகன பேரணி செல்ல இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

அதனால் நகராட்சி திருமண மண்டபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து விழாவில் கலந்து கொண்டுடனர் இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், சிறப்பு விருந்தினர்கள் யூ கே பி முத்துக்குமாரசாமி. தலைவர் உடுமலை மக்கள் பேரவை /வர்ஷிணி இளங்கோ . லட்சுமி ஜுவல்லரி சிபி சக்கரவர்த்தி. உடுமலை நகர மன்ற துணைத் தலைவர் எஸ் கலைராஜன்.
யோகனந்தம், கவிஞர் உடுமலை அமிர்த நேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பின்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
