BREAKING NEWS

அடுத்த 2 மாதங்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடல் அரசு அதிரடி உத்தரவு.

அடுத்த 2 மாதங்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடல் அரசு அதிரடி உத்தரவு.

இந்தியாவின் அண்டை நாடான  இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் நடப்பாண்டு படு மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.  பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் காய்கறிகளின் விலை என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

பால், அரிசி, காய்கறி என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள்  அன்றாட செலவையே சமாளிக்கவே முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும், படுமோசமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் இலங்கை அரசு பொது போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.

மேலும் எரிபொருள் கட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 2  மாதங்களுக்கு இலங்கையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளை மூடவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுத்துறை ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளை மூடுவதால் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என சமுக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )