BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி தென்பாதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி தென்பாதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி தென்பாதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது நெய்வேலி தென்பாதி நெய்வேலி வடபாதி கிராமங்களைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள்நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக நெய்வேலி தென்பாதி வருவாய் கிராமத்தில் 50 ஹக் சேரும் நெய்வேலி வடபாதி வருவாய் கிராமத்தில் 35ஹக்டேரும் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.

நெய்வேலி தென் பாதியில் கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் பிடிக்கும் அலுவலர்களை நியமனம் செய்யாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று திறப்போம் நாளை திறப்போம் என்று கடந்த 20 நாட்களாக திறக்காமல் உள்ளதால் விவசாயிகள் அடுத்த ஊர்களான இடையாத்தி கபாலி பட்டி திருவோணம் மற்றும் இடையாத்தி ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களில் வாடகை வண்டி பிடித்து கொண்டு சென்று விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

பல விவசாயிகள் திறக்கப்படாமல் ஆட்கள் பணியமர்த்த படாமல் உள்ள நெய்வேலி தென்பாதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை கொட்டி திறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்து கிடக்கின்றனர் அரசாங்கம் 40 லட்ச ரூபாய்க்கு நேரடி கொள்முதல் நிலையம் கட்டி அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் காட்சிப்பொருளாக வைத்திருப்பதை சமூகநீதி கழக விவசாய அணி வன்மையாக கண்டிக்கிறது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )